EBM News Tamil
Leading News Portal in Tamil

காதலன் கண்முன் அரங்கேறிய காதலியின் பாலியல் பலாத்காரம்!!

கோவாவிற்கு சுற்றுலா வந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்கள் கைது!
தற்போது கோடை விடுமுறை நடைபெற்றுவரும் நிலையில் மக்கள் சுற்றுலாவிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கோவா செர்னாபடிம் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் அங்கு வந்திருந்த இளம் காதல் ஜோடி நேற்று வந்துள்ளனர். அப்போது கடைகரையில் இரவு இருவரும் பேசிகொண்டிருக்கும் பொது திடீரென அங்குவந்த இரண்டு மர்ம நபர்கள் அவர்களை மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை நிர்வாகமாக புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர், தன் காதலன் கண்முன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். இதை போலீசில் சொனால் இந்த வீடியோவை இணையத்தில் வெளிவிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.


இந்நிலையில், அந்த பெண்ணும் அவர் காதலரும் தெற்கு கோவா காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் இந்தூரை சேர்ந்த சஞ்சிவ் தனஞ்செய், ராம் சந்தோஷ் என இருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.