EBM News Tamil
Leading News Portal in Tamil

கிணத்துலேயே தண்ணீர் இல்லை! திண்டாட்டத்தில் மக்கள்!!

மத்தியபிரதேசத்தில் குடிக்க கிணற்றில் கூட தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்!!
மத்தியபிரதேசம் மாநிலத்தில் திண்டோரி மாவட்டத்தில் உள்ள ஷபுரா என்ற கிராம பகுதியில் குடி தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டியில் மட்டும் இன்றி கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளும் வற்றி விட்டது.
ஷபுரா கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிணறில் தான் கிராமமே குடி தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்த கிணற்றிலும் தண்ணீர் முழுமையாக குறைந்து விட்டது. இந்நிலையில், அந்த கிணற்றுக்குள் இறங்க மேலும் கீழுமாக ஏறி, இறங்க கற்களை பதித்துள்ளனர். குடிநீருக்காக தங்களது உயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்து வருகின்றனர். தற்போது, அந்த கிணற்றிலும் தண்ணீர் முழுமையாக குறைந்து விட்டத்து. அப்போதும் கூட மக்கள் அந்த தண்ணீரையும் கிண்ணம் வைத்து குடத்தில் சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் விரலாக பரவி வருகிறது.


இதை வீடியோவின் எதிரொலியாக அப்பகுதிக்கு தினமும் 2 லாரி தண்ணீர் வழங்க உள்ளூர் நிவாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது!