குடியரசு தின விழாவுக்கு போதையில் வந்த தலைமை ஆசிரியர் கைது | Headmaster arrested for coming to Republic Day function intoxicated
பாட்னா: பிஹாரின் முசாபர்பூர் மாவட்டம் மினாப்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தேசியக்கொடி ஏற்ற மேடைக்கு தலைமை ஆசிரியர் அழைக்கப்பட்டபோது, தலைமை ஆசிரியர் சஞ்சய் குமார் தடுமாறியபடி வந்தார். கொடி ஏற்றும்போது தள்ளாடினார்.
இதுகுறித்து கிாரம மக்கள் உள்ளூர் எம்எல்ஏ ராஜீவ் குமார் மற்றும் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் சஞ்சய் குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று கைது செய்தனர். அவருக்கு ஆல்கஹால் பரிசோதனை செய்தனர். இதில் கிடைக்கும் முடிவு அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.