EBM News Tamil
Leading News Portal in Tamil

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்கல்லுக்கு பெயர் சூட்டும் இந்திய மாணவர் | Indian student names newly discovered aderoid


Last Updated : 28 Jan, 2025 02:26 AM

Published : 28 Jan 2025 02:26 AM
Last Updated : 28 Jan 2025 02:26 AM

புதுடெல்லி: டெல்லி அருகே நொய்டாவில் செயல்படும் ஷிவ் நாடார் பள்ளியை சேர்ந்த தாஷ் மாலிக், நாசாவின் விண்வெளி திட்டத்தில் பங்கேற்று புதிய விண்கல்லை கண்டுபிடித்து உள்ளார். இந்த புதிய விண்கல்லுக்கு நிரந்தர பெயர் சூட்ட மாலிக்குக்கு நாசா அழைப்பு விடுத்திருக்கிறது.

தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாலிக் கூறியதாவது: சுமார் 2022-ம் ஆண்டில் நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு திட்டத்தில் இணைந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆய்வு செய்து புதிய விண்கல்லை கண்டுபிடித்தேன். இந்த விண்கல் தற்போது ‘2023 OG40’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர பெயர் சூட்ட நாசா சார்பில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சில பெயர்களை மனதில் குறித்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு பெயரை விண் கல்லுக்கு சூட்டுவேன். இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!