EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியது | Voter turnout in India nears 100 crores


புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி நிறுவப்பட்டது. இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நாளை வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலின்போது 96.88 கோடியாக இருந்தது. இது இப்போது 99.1 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 21.7 கோடி ஆகும். வாக்காளர்களில் பாலின விகிதம் கடந்த ஆண்டில் 948 ஆக இருந்தது. இது இப்போது 954 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 7-ம் தேதி வெளியிட்டார். அப்போது, நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை விரைவில் 100 கோடியைத் தாண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.