கும்பமேளா குறித்து அவதூறு: உ.பி.யில் 2 பத்திரிகையாளர் கைது | UP journalist arrested for sharing clip of women taking holy dip at Maha Kumbh
மகா கும்பமேளா குறித்தும் இந்து கடவுள்கள் பற்றியும் அவதூறு பரப்பியதாக 2 பத்திரிகையாளர்களை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோட்வாலி நகர காவல்துறை அதிகாரி அலோக் மணி திரிபாதி கூறுகையில், கும்பமேளா குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட கம்ரான் அலி என்ற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மதச் சின்னங்களை அவமதித்தற்காக இவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் 299-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இணைய பத்திரிகையாளரான கம்ரான் அலியை முகநூலில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். இந்த வீடியோவை பரப்பியதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுபோல் கும்பமேளா மற்றும் இந்து கடவுள்கள் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பியதாக ஜைத்பூர் அருகே போஜா கிராமத்தை சேர்ந்த அபிஷேக் குமார் என்பவரை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.