நாகாலாந்து கிரிப்டோ ஊழல்: சீனர்களுக்கு சொந்தமான ரூ.106 கோடி சொத்து பறிமுதல் | Rs 100 cr assets in Nagaland crypto scam linked to Chinese seized
நாகாலாந்து கிரிப்டோ ஊழல் வழக்கில் சீனர்களுக்குச் சொந்தமான ரூ.106 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
நாகாலாந்து மாநிலம் கொஹிமா நகரில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கிரிப்டோவில் ரூ.57 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, செல்போன் செயலி மூலம் ஏராளமானோர் அதில் முதலீடு செய்தனர். இந்நிலையில், நிறுவனம் அறிவிப்பு செய்தபடி அந்த முதலீட்டாளர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு பணம் முறையாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் தலைமறைவாயினர்.
இதுதொடர்பாக அமலாகத்துறை விசாரணை நடத்தியதில் அவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்குச் சொந்தமான ரூ.497 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் இந்தியா, துபாயில் உள்ள சீனர்களின் ரூ.106 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன்மூலம் இந்த கிரிப்டோ ஊழலில் ஈடுபட்ட நிறுவனத்தின் ரூ.603 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.