ரூ.1 கோடி கோகைனுடன் ஆப்பிரிக்க இளைஞர் நவி மும்பையில் கைது | African man held with 1 crore cocaine in Navi Mumbai
மும்பை: நவி மும்பையில் ரூ.1 கோடி கோகைன் போதைப்பொருளுடன் மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் நவி மும்பை, உல்வே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நவி மும்பை போலீஸார் கடந்த திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இதில் 412 கிராம் எடையுள்ள கோகைன் போதைப் பொருளை கைப்பற்றினர்.
இதையடுத்து வீட்டில் இருந்த கினியா நாட்டை சேர்ந்த 35 வயது நபரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, அதை வாங்கவிருந்தது யார் என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.