EBM News Tamil
Leading News Portal in Tamil

டிஆர்டிஓ முன்னாள் தலைவர் அருணாசலம் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் | Prime Minister Narendra Modi condoles the demise of former DRDO Chairman Arunachalam


புதுடெல்லி: ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைமை இயக்குநராக இருந்தவர் டாக்டர் அருணாச்சலம் (87). பாபா அணு ஆராய்ச்சி மையம், தேசிய ஏரோனாடிக்கல் ஆய்வுக்கூடம் மற்றும் பாதுகாப்பு மெட்டாலர்ஜிகல் ஆய்வுக் கூடம் ஆகியவற்றிலும் அருணாச்சலம் பணியாற்றியுள்ளார். அவர் அமெரிக்காவில் நேற்று முன்தினம் காலமானார்.

அவரது மறைவுக்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, ‘‘டாக்டர் வி.எஸ்.அருணாசலத்தின் மறைவு, அறிவியல் சமூகத்துக்கு பெரும் இழப்பு. அவரது அறிவு, ஆராய்ச்சி ஆர்வம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் வளமான பங்களிப்பு ஆகியவற்றுக்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.