EBM News Tamil
Leading News Portal in Tamil

சத்தீஸ்கர், ம.பி சட்டப்பேரவை தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு | BJP releases first list of 21 candidates for Chhattisgarh polls, 39 for MP elections


புதுடெல்லி: சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தமது முதற்கட்ட வேட்பாளர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. எனினும், எந்த மாநிலத்துக்கும் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் பாஜக, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில், பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 21 வேட்பாளர்களின் பெயர்களும், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு 39 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள முன்னாள் எம்பி நாராயண் பஞ்சாரியா தலைமையில் 21 பேர் கொண்ட தேர்தல் நிர்வாகக் குழுவும், மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையில் தேர்தல் அறிக்கைக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளன.