புதுடெல்லி: தேசிய அளவில் சிறப்பாகப் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய 954அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிபிஎம்ஜி பதக்கத்தை சிஆர்பிஎப் வீரர் இபோம்சா சிங் பெறுகிறார். 229 பேருக்கு பிஎம்ஜி, 82 பேருக்கு பிபிஎம், 642 பேருக்கு பிஎம் பதக்கம் வழங்கப்படும். இதேபோல நாடு முழுவதும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த 53 பேர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 48 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.