டெல்லி சுதந்திர தின விழாவில் செவிலியர், விவசாயிகள் உட்பட 1,800 சிறப்பு விருந்தினர்கள் | 1800 special guests including nurses farmers Delhi Independence Day celebrations
புதுடெல்லி: நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
அவரது உரையை கேட்க, செவிலியர்கள், விவசாயிகள் என 1,800 பேர் சிறப்பு விருந்தினர்களாக குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுதந்திர தின உரையில், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் நாட்டின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களின் தொகுப்பு இடம்பெறவுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் சுதந்திர தினவிழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் மீனவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மத்திய விஸ்டா திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், காதி துறை ஊழியர்கள், பிஎம்-கிஸான் திட்ட பயனாளிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.