EBM News Tamil
Leading News Portal in Tamil

நவாப் மாலிக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் | Supreme Court Grants Interim Bail to Nawab Malik


மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) சேர்ந்தவர் நவாப் மாலிக். இவருக்கும், இந்தியாவிலிருந்து தப்பியோடிய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி 2022 பிப்ரவரியில் அமலாக்கத் துறை மாலிக்கை கைது செய்தது.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மருத்துவ காரணங்களுக்காக மாலிக்கிற்கு இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து என்சிபி-யின் தேசிய செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ கூறுகையில், “64 வயதான நவாப் மாலிக் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி’’ என்றார்.