EBM News Tamil
Leading News Portal in Tamil

இரும்புச் சத்து அதிகரிக்க, ஜீரண சக்திக்கு உதவும் முருங்கைக் கீரை ரசம்..!

முருங்கைக் கீரை இரும்புச் சத்து, வைட்டமின், மினரல்களை உள்ளடக்கியது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து சீராக வைக்க உதவும். இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 1/2 கப்

புளித் தண்ணீர் – 1 கப்
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி
பூண்டு – 5 பற்கள்உப்பு – தே. அளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
ரசம் பொடி – 2 Tsp
சீரகம் – 1 Tsp
மிளகுப் பொடி – 1 Tsp

தாளிக்க :

எண்ணெய் – 1 Tsp
கடுகு – 1/2 Tsp
சீரகம் – 1 Tsp
கருவேப்பிலை
கொத்தமல்லி

செய்முறை :

குக்கரில் துவரம் பருப்பை போட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும். வெந்ததும் இறக்கி காற்று வெளியேறியதும் மசித்துக்கொள்ளுங்கள்.

கடாயில் கீரையை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிரட்டி வேக விடவும். வெந்ததும்ம் அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் புளித் தண்ணீரைக் கரைத்து வாசனை போகுமாறு நன்கு கொதிக்க விடுங்கள்.

கொதித்ததும் பருப்பு மற்றும் கீரையைப் போட்டு நன்கு கிளறுங்கள். அடுப்பை சிறு தீயில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

அடுத்ததாக அதில் அரைத்த பெருங்காயப் பொடி , ரசப் பொடி , சீரகப் பொடி, மிளகுப் பொடி என சேர்த்து கிளறுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிக்க விடுங்கள். அடுத்ததாக கருவேப்பிலை சேர்த்து தாளித்து விடுங்கள்.

பின் ரசத்திற்கு பொங்கி வருவது போல் நுறை பொங்கி வரும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள்.

முருங்கைக் கீரை ரசம் தயார்.