EBM News Tamil
Leading News Portal in Tamil

கேரள மாநிலத்தில் உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி! | abandoned by relatives elderly kerala woman donated her savings to old age home


ஆலப்புழை: கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர். இளம் வயதில் சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார். அந்த பணத்தை சட்டப்படி உரிமை கோர, இவரது உறவினர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார். முதுமையடைந்ததும், உறவினர்கள் யாரும் இவரை கவனித்துக்கொள்ள முன்வரவில்லை.

இதனால் கடந்த 2019ம் ஆண்டு செர்தலா பகுதியில் மயிதாரா என்ற இடத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். கடந்தாண்டு இவர் படுத்த படுக்கையாகிவிட்டார். இதனால் இவர் ஆராட்டுபுழாவில் உள்ள சந்த்வனதீரம் முதியோர் இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.

6 மாதங்​களுக்கு முன்பு இவர் தனது கடைசி காலத்தை உறவினர்​களு​டன் கழிக்க விரும்பி​னார். ஆனால், உறவினர்​கள் யாரும் பார​தி​யம்​மாவை பார்க்க முன்​வர​வில்​லை. இதனால் ஏமாற்​றம் அடைந்த பார​தி​யம்​மா, தனது வங்கி சேமிப்பை பெறு​வதற்​காக குறிப்​பிடப்​பட்ட சட்​டப்​படி​யான உறவினர்​களின் பெயரை நீக்​கும்​படி முதி​யோர் இல்ல கண்​காணிப்​பாளரிடம் கூறி​னார்.

இவரது வேண்​டு​கோள் ஆட்​சி​யரின் கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. அதன்பின் பாரதியம்மாவின் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் சேமிப்பு பணத்​துக்​கான ஆவணங்​களை, முதி​யோர் இல்ல கண்​காணிப்​பாளர் விஜி ஜார்​ஜிடம் வழங்​கி​னார்.

சமூக நீதித்​துறை இயக்​குநர் டாக்​டர் அருண் எஸ் நாயர் கூறுகை​யில், ‘‘மு​தி​யோர்​களை பாது​காக்​க தவறும் உறவினர்​களுக்​கு, அவர்​களின் சொத்​துகளை பெற உரிமை கிடை​யாது. இது தொடர்​பாக தேவை​யான நடவடிக்​கை​ எடுப்போம்’’ என்றார்