EBM News Tamil
Leading News Portal in Tamil

98 நாள், 4,000 கி.மீ… காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி! | 14 year old girl ran away from Kashmir to Kumari


நாகர்கோவில்: பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14). இவர், பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு ஓட்டம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி காஷ்மீரில் இருந்து தனது ஓட்டத்தை சானியா தொடங்கினார். அவருக்கு பாதுகாப்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடன் வந்தனர். டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழ்நாடு வந்த சானியா நேற்று முன்தினம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.

தனது சாதனை ஓட்ட பயணத்தை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் அவர் நிறைவு செய்தார். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை மொத்தம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 98 நாட்களில் ஓடி கடந்து வந்துள்ளார். சானியாவை சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.