EBM News Tamil
Leading News Portal in Tamil

தேசம் கடந்து வென்ற காதல்!  | A love story began at ashram


Last Updated : 31 Jan, 2025 05:43 PM

Published : 31 Jan 2025 05:43 PM
Last Updated : 31 Jan 2025 05:43 PM

மாதா அமிர்தானந்தமயி தேவியின் ஆசிரமத்தில் ரஷ்ய மணமகளுக்கும் உக்ரேனிய மணமகனுக்கும் நடந்த திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போருக்கு இடையே அமைதி – ஒற்றுமையின் அடையாளமாக இந்த இருவரின் திருமணம் பார்க்கப்படுகிறது.

உக்ரைனைச் சேர்ந்த மணமகன் சாஷா ஆஸ்ட்ரோவிக் – ரஷ்யாவைச் சேர்ந்த மணமகள் ஒலியா உசோவாவும் கரோனா, போர் காரணமாகப் பல வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில் மாதா அமிர்தானந்தமயி தேவியின் அமிர்தபூர் ஆசிரமத்தில் மீண்டும் இணைந்தவர்களின் திருமணம் 2025 ஜனவரி 25 அன்று நடந்து முடிந்துள்ளது. கடினமான காலத்தில் அமிர்தானந்தமயி தேவி ஆசிரமம் அடைக்கலம் அளித்தை இருவரும் நினைவுகூர்ந்தனர்.

கடுமையான காலங்களிலும் வென்ற காதல்!

அசாதாரணமான சூழலில் பாதுகாப்பு அளிப்பதில் மாதா அமிர்தானந்தமயி தேவியின் ஆசிரமம் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. சுமார் 2,000க்கும் அதிகமான வெளிநாட்டவரின் தாயகமாக ஆனந்தமயி தேவியின் ஆசிரமம் உள்ளது. அந்தவகையில் அன்பு, இரக்கம், ஆன்மிக வளர்ச்சியில் உலகளாவிய சமூகத்தை உருவாக்கும் விதத்தில் அமிர்தானந்தமயி ஆசிரமம் செயல்பட்டுவருகிறது.

அதுவே சாஷா- ஒலியாவுக்குக் கடுமையான காலங்களில் வேலையைத் தொடரவும் உத்வேகம் அளித்தது.

இதன் பின்னணியில்தான் போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான மன ஆரோக்கியம் குறித்த சாஷாவின் ஆராய்ச்சியும், ஆன்மாவைப் புரிந்துகொள்வதில் ஒலியாவின் அர்ப்பணிப்பும் நிகழ்ந்துள்ளது.

FOLLOW US