EBM News Tamil
Leading News Portal in Tamil

உலகக் கோப்பை இறுதியில் இந்தியா: நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!  | team india reaches final fans celebrates nationwide


சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. மும்பையில் நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை இந்தியா வீழ்த்தியது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம் என பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடினர். வீதிகளில் பட்டாசு வெடித்தும், முழக்கம் எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2011 முதல் தொடரை நடத்தும் அணி தான் கோப்பையை வென்று வருகிறது. அந்த வகையில் இம்முறை இந்தியாவுக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதை கருத்து கொண்டுள்ள ரசிகர்கள் ‘வேர்ல்ட் கப் முக்கியம் டீம் இந்தியா’ என சொல்லி வருகின்றனர்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய அணியை பிரதமர் நரேந்திர மோடி, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, முன்னாள் கேப்டன் அசாருதீன் உட்பட பலர் வாழ்த்தி உள்ளனர்.