சென்னை: இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பாபாஜி பக்தர்களுடன் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்த் கடந்த 9-ம் தேதி புறப்பட்டு ஒரு வார ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.