EBM News Tamil

போராடும் விவசாயிகள் தீவிரவாதிகள்…கங்கனா ரானாவத் ட்வீட்டால் பரபரப்பு!!

0

ஜலந்தர்: வேளாண் மசோதாவுக்கு போராடி வரும் இதே தீவிரவாதிகள்தான் சிஏஏ மூலம் ஒருவர் கூட குடியுரிமை இழக்காத நிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்று பகிரங்கமாக நடிகை கங்கனா ரானாவத் விமர்சனம் வைத்துள்ளார்.

வேளாண் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ராஜ்ய சபாவில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தினால், தோற்கடிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்து வருகிறது. பஞ்சாப் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் பஞ்சாபி ஆகிய மொழிகளில் ட்வீட் செய்து இருந்தார். இதற்கு முன்னதாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்த, ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் ஒரே அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதையடுத்து, பஞ்சாபில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

Leave A Reply

Your email address will not be published.