சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் வெளியாகியுள்ளது.
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
சனிக்கிழமைகளில் வாரம் முழுவதும் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அலசும் கமல், எவிக்ஷனில் காப்பாற்றப்படும் இருவரின் பெயர்களையும் அறிவிப்பார்.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் சில டாஸ்க்குகளை கொடுக்கும் கமல் எவிக்ஷனையும் அறிவிப்பார். ஞாயிற்றுக் கிழமைக்கான எபிசோடும் சனிக் கிழமையே காட்சியாக்கப்படுவதால், வெளியேற்றப்படும் நபர் குறித்த தகவலும் சனிக் கிழமையே கசிந்து விடுகிறது.