EBM News Tamil

“இதுதான் கடைசி”.. பாண்டிங்கிடம் பேசிய அஸ்வின்.. ஐசிசிக்கு பறந்த அவசர கடிதம்.. அதிரடி பின்னணி!

0

துபாய்: டெல்லி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் செய்த காரியம் காரணமாக தற்போது சர்வதேச அளவில் கிரிக்கெட் விதியில் மாற்றம் கொண்டு வர ஆலோசனைகள் நடந்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகளில் மன்கட் அல்லது பிரவுன் விக்கெட் என்று அழைக்கப்படும் விக்கெட் முறை மிகவும் பிரபலம் ஆகும். இந்த விக்கெட் முறை மூலம் ரன்னர் எண்டில் இருக்கும் வீரர் கிரீஸை தாண்டி நிற்கும் போது, பவுலர் அவரை விக்கெட் எடுக்க முடியும். அதாவது ரன்னர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் நிற்காமல் வெளியே நின்றால் அவரை பவுலர் விக்கெட் எடுக்க முடியும். பொதுவாக பவுலர்கள் இந்த விக்கெட் எடுப்பதை விரும்பமாட்டார்கள்.

சர்வதேச போட்டிகளில் பெரும்பாலும் வீரர்கள் இப்படி மன்கட் முறையில் விக்கெட் எடுக்க மாட்டார்கள். இது ஐசிசி அனுமதித்த விதிதான். ஆனாலும் பவுலர்கள் இந்த முறையில் விக்கெட் எடுக்க மாட்டார்கள். தேவையில்லாத விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் இப்படி விக்கெட் எடுக்க மாட்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.