EBM News Tamil

கேம் ஸ்டார்ட்- சீனாவுடன் நெருங்கிய ராஜபக்சேவுக்கு செக்- தமிழர் தலைவர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை!

0

டெல்லி: சீனாவுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கம் காட்டுவதால் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா மீண்டும் தலையிட தொடங்கி உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகள் மீதான நமது பிடி 1990களுக்குப் பின்னர் கைவிட்டுப் போனது. குறிப்பாக இலங்கையை சீனா கபளீகரம் செய்து கொண்டே இருக்கிறது. தென்னிலங்கை பகுதியை அதிபராக இருந்த ராஜபக்சே சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். சீனாவின் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கும் வந்து போயின. இதனால் இலங்கை மீது கடும் கோபத்தை இந்தியா அப்போது காட்டியது.

இதன்பின்னர் நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா அதிபரானார். அப்போது, தம்மை இந்தியாவே தோற்கடித்தது என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் மகிந்த ராஜபக்சே. மைத்திரிபால சிறிசேனவை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்சே, இலங்கையின் அதிபராகவும் மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் இப்போது உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.