EBM News Tamil

சீரகம் இல்லா உணவு சிறக்காது ?!

0

தாவரவியல் பெயர்: Cuminum cyminum

வேறு பெயர்: அசை, சீரி, பித்தனாசினி, போஜனகுடோரி

பயன்படுத்தும்  உறுப்பு: விதை

செய்கை: பசித்தீத்தூண்டி, துவர்ப்பி, அகட்டுவாய்வகாற்றி, வெப்பம் உண்டாக்கி.

சீரக சுத்தி:

சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தும் முன் அதை நச்சு நீக்கிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

போஜனகுடோரி:

  • சீர் + அகம் = சீரகம். சீர் என்பது ஒழுங்கானது, அகம் என்பது நம் உடல் மற்றும் உள்ளம்.எனவே வயிற்றுப்பகுதியில் உள்ளவற்றை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்பது பொருள்.
  • கார்ப்பு, இனிப்பு சுவையும்; குளிர்ச்சி தன்மையும் கொண்டது.
  • சீரகத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.
  • சீரகத்திலிருந்து 56% Hydrocarbons, terpene, thymol போன்ற எண்ணைப்பொருள்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன. இதில் thymol வயிற்றுப் புழுக்களை அழிக்கப் பயன்படுகிறது.
  • சீரகம் உடல் கொழுப்பைக் குறைக்க மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவை இயற்கையாக மேம்படுத்த உதவுகிறது.
  • சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதை இரத்த சோகைக்குப் பயன்படுத்தலாம்.
  • மாதவிடாய் போது சீரகத்தை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட, வேதனை நீங்கும்.
  • சீரகத்தைப் பொடித்து எலுமிச்சம்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் குறையும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை சீராகப் பராமரிக்கவும்; மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
  • சீரகம் மற்றும் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இருமல் நீங்கும்.
  • சீரகத்தைப் பொடித்து வெண்ணெயில் கொடுக்க எரி குன்மம் ( peptic ulcer) நீங்கும்.
  • சீரகத் தைலத்தை தலையில் தேய்த்து முழுகி வர- கண்நோய், மயக்கம், தலைவலி, மந்தம் நீங்கும்.

“ அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப மருந்தாகினும் சீரகத்தை சரியான அளவில் பயன்படுத்தி வாழ்வில் எவ்வித நோய் நொடியும் இல்லாமல் வாழலாம், நமனும் நம்மை நெருங்க, அஞ்சி ஓடி விடுவான் எனக் கூறி உரையை முடிக்கிறேன்.

Dr. சுபாஷிணி BSMS

Leave A Reply

Your email address will not be published.