EBM News Tamil
Leading News Portal in Tamil

நீலகிரி, கோவை மாவட்டங்களில் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு பருவக்காற்றால் நீலகிரி, கோவையில் இன்று இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூலை 20, 21-ல் நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சின்னக்கல்லார் -7, புழல் -5, ஊத்துக்கோட்டை, வால்பாறை, பொன்னேரியில் தலா 4 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. ஜூலை 23 வரை தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. ஜூலை 23 வரை கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.