இந்தியாவிற்கு 1,000 கோடியில் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா!
இந்தியாவிற்கு ஆயிரம் கோடி மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகளை விற்க அமெரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் போர் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய 10 ஹர்பூன் ஏவுகணைகள், 16 இலகுரகு எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகள் மற்றும் மூன்று பயிற்சி எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகளை வாங்குவதற்கு மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ஆயிரத்து 180 கோடி மதிப்பிலான இந்த ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் கடல் பாதுகாப்பு திறன் மேம்படும் என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் இதற்கான கடிதத்தை அந்நாட்டு காங்கிரஸ் அவைக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன் இந்த ஏவுகணைகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். ஹார்பூன் பிளாக் 11 (Harpoon Block II ) மற்றும் டார்ப்பீடோஸ் (torpedoes) ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.