EBM News Tamil
Leading News Portal in Tamil

Lockdown: ஏப்ரல் 20க்கு பிறகு வேலைக்கு செல்லப்போவோர் கவனத்திற்கு….

ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20க்கு பிறகு சில நிபந்தனைகளுடன், தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, கிராம புறங்களில் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.அதேபோல், சில நிறுவனங்கள் போதிய வசதிகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணி இடங்களிலும், பொதுவெளியிலும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

1. பொதுவெளியிலும், பணியிடங்களிலும்
முகக்கவசத்தை அனைவரும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்

2. பொதுவெளியிலும், பணியிடங்களிலும் அனைவரும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்3. பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடக்கூடாது

4. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, திருமணம் , இறுதி சடங்கு நிகழ்வுகளில் ஒன்று கூடுவதை கடைபிடிக்க வேண்டும்

5. பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்

6. மது விற்பது, குட்கா,புகையிலை பொருட்களை விற்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புகையிலை மென்று துப்பினால் தண்டனை விதிக்கப்படும்.

7. பணி இடங்களில், சானிடைசர், வெப்பம் கணக்கிடுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்

8. பணி இடங்களில் ஷிப்ட் மாறும் போது, ஒருமணி நேரம் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

9. 65 வயதுக்கு மேற்பட்டோர், 5 வயதுகுட்பட்ட குழந்தைகளின் பெற்றோர், நோய் உடையோர் வீட்டில் இருந்த பணி செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும்

10. ஆரோக்ய சேது ஆப்பை பயன்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்

11. ஒவ்வொரு ஷிப்ட் மாறும் போது, நிறுவனங்கள் பணி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்

12. அதிகம் பேர் கூடும் மீட்டிங் நடத்த கூடாது