EBM News Tamil
Leading News Portal in Tamil

பொதுப்பணித் துறை இணையதளத்தில் அணைகளின் நீர் இருப்பு விவரம்: 5 ஆண்டுகளாக நீக்கம்; மீண்டும் பதிவிட விவசாயிகள் வலியுறுத்தல்

பொதுப்பணித் துறை இணைய தளத்தில் தமிழக அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல் 5 ஆண்டுகளாக இடம்பெறாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை மீண்டும் பதிவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மேட்டூர், பவானி சாகர், வைகை, பாபநாசம், சாத்த னூர், பரம்பிக்குளம், திருமூர்த்தி உட்பட 15 பெரிய அணைகள் உள்ளன. இந்த அணைகள் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த ஆண்டு பருவமழை முன்னதாகவே தொடங்கியதுடன் பலத்த மழையும் பெய்ததால் கர்நாடகாவில் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதை யடுத்து மேட்டூர் அணை நிரம்பிய தால், ஜூலை 19-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப் பட்டது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளி யேற்றம் ஆகியவை குறித்து தெரிந்துகொள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 8 டெல்டா மாவட்ட மக் கள் ஆவலாக உள்ளனர். அது போல மற்ற அணைகளின் பாசன தாரர்களும் அணையின் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் பொதுப் பணித் துறையின் இணையதளத் தில் தமிழக அணைகளின் நீர்மட் டம் குறித்த தகவல் 5 ஆண்டு களாக இடம்பெறாமல் இருப்ப தால் அவர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “கடந்த 2013-ம் ஆண்டு வரை விவசாயிகள் அனைவரும் தமிழக பொதுப்பணித் துறை இணையதளம் மூலம் தங்கள் பகுதி அணைகளின் நீர்இருப்பு உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொண்டனர். அதன் பிறகு பொதுப்பணித் துறை இணையதளத்தில் இருந்து அணை கள் நீர் இருப்பு விவரம் இடம் பெற்றிருந்த பக்கம் நீக்கப் பட்டது. கர்நாடக விவசாயி கள் தமிழக அணைகளின் நீர் இருப்பை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அது நீக்கப்பட்டது” என்றார்.
இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் அனைத்தும் வெளிப் படையாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘உழவன்’ என்ற செயலியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பொதுப்பணித் துறை இணையதளத்தில் தமிழக அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் இடம்பெறாதது விவ சாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, இந்த இணைய தளத்தில் முன்புபோல அணை களின் நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்ட விவரங் களை தினமும் பதிவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் செல் போனில் இணையதளம் மூலம் தகவல்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. மேலும், படித்த இளைஞர்களும் விவசாயத் தையும், நீர் ஆதாரங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகின்ற னர். எனவே, பொதுப்பணித் துறை இணையதளத்தில் மட்டுமல்லாமல், ‘உழவன்’ செயலியிலும் அனைத்து அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட முதல்வர் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.