Ultimate magazine theme for WordPress.

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்

ஜெயப்பூர்: ராஜஸ்தானில் ஆதார் கார்டுகளை பழைய பேப்பர் கடையில் எடைக்கு எடை போட்ட தபால் காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 1830 ஆதார் கார்டுகள் பழைய பேப்பர் கடையில் கிடந்த விவகாரத்தில் தபால்காரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாபூரா நகரில் உள்ள பழைய பேப்பர் கடை ஒன்றில் கட்டுக்கட்டாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் இருந்தது. அவை மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. போலீசார் விசாரணையில் ஜாலாபூரா பகுதியைச் சேர்ந்த தபால்காரர் சதீஷ்குமார் என்பவரே, கார்டுகளை உரியவர்களிடம் கொடுக்காமல், பழைய பேப்பர்களுடன் சேர்த்து விற்று காசு பார்த்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதீஷ்குமார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உரியவர்களிடம் ஆதார்கார்டுகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் துறை தெரிவித்துளது.

Leave A Reply

Your email address will not be published.