ரசிகர் மன்றம் தெரிவித்த தகவல்: வறுமையில் வாடிய கர்ப்பிணிக்கு உதவிய நடிகர் விஜய்..!
தேனியில் ஊரடங்கு காரணமாக வறுமையில் தவித்து வந்த இஸ்லாமிய தம்பதிக்கு, நடிகர் விஜய் உதவி செய்துள்ளார்.
தென்காசியைச் சேர்ந்த அமீன், கண்சுலாபீவி ஜனவரி மாதத்தில் தேனியில் குடியேறி உள்ளனர் . ஒன்றரை மாதத்திலேயே கொரோனா அச்சம் வர, அமீன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளார். கண்சுலா பீவி 5 மாத கர்ப்பமாக இருக்கும் சூழலில், குடும்ப அட்டை இல்லாததால் ரேஷன் பொருட்கள் கூட இல்லாமல் தவித்துள்ளனர். மேலும் 5 மாத கர்ப்பிணியான தன் காதல் மனைவிக்கு மருத்துவச் செலவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த தேனி விஜய் ரசிகர் மன்றத்தினர் நடிகர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவ செலவுக்கு மட்டும் பணம் தந்தால் போதும் என அமீன் கூறியதால் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை நடிகர் விஜய் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.