அஜித் பிறந்தநாள் காமென் DP ரிலீஸ் – ட்ரெண்டாக்கி கொண்டாடும் ரசிகர்கள்!
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பிறந்தநாள் காமென் டிபி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் இவரை ‘தல’ என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். வரும் மே 1-ம் தேதி ‘தல அஜித்’ தனது 49-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் அஜித் படங்களை ஸ்பெஷல் காட்சிகளாக திரையிட்டுக் கொண்டாடும் ரசிகர்களின் திட்டங்கள் ரத்தாகி உள்ளன.
இருந்தாலும் அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அஜித்தின் புகழ்பாடி சிறப்பாக பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சமூகவலைதளத்தில் அனைவரும் பயன்படுத்துவதற்காக பிறந்தநாள் காமென் டிபி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதை அருண் விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் எஸ்.தமன், ராகுல் தேவ் , பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, நித்தி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி உள்ளிட்ட 14 பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் கொரோனா காலத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.