EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா தடுப்பு பணி : நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக அரசுக்கு நிதியுதவி அளிக்குமாறு, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தமாக ரூ.20 லட்சம்), பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் விஜய். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.