சேலையிலும் நானே.. மாடர்ன் உடையில் சோலையும் நானே.. க்யூட் நைலா உஷா!
சென்னை : நைலா உஷா புடவையிலும், மாடர்ன் உடையிலும் தனக்கு தானே போட்டா போட்டி போட்டுக்கொண்டு போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
நைலா உஷா நடிகை, ரேடியோ ஜாக்கி என பன்முகம் கொண்ட ஒரு பிரபல பெண்மணி. இவர் மலையாளத்தில் குஞ்சானந்தன்றே கடை , பயர்மென், காங்ஸ்டர் , பத்தமாரி ,பிரேதம், புண்யாலன் அகர்பத்திஸ் ,புண்யாலன் பிரைவேட் லிமிடெட் , லூசிபர், பொரிஞ்சு மரியம் ஜோஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்று அடிக்கடி சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார் நைலா.வித்யாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர்
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்கின்றனர். ஆனால் நடிகைகளோ இக்காலத்தை அஸ்ஸர்ட்டாக பயன்படுத்துகின்றனர். காலை யோகா செய்வது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை அனைத்தையும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தனது முழு பொழுதுபோக்காக செய்கின்றனர்.
அந்த வகையில் நைலா உஷாவும் வித விதமாக போட்டோ சூட் நடத்தியுள்ளார் புடவையிலும், மாடர்ன் உடையிலும் தனக்கு தானே போட்டா போட்டி போட்டுக்கொண்டு போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை லைக்ஸ்களை அள்ளி வருகின்றன. சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைபடங்கள் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. அதில் அவர் அணிந்திருக்கும் வெள்ளை சல்வார் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கிறது .