EBM News Tamil
Leading News Portal in Tamil

அதர்வா – ஸ்ரீகணேஷ் இணையும் ‘குருதி ஆட்டம்’

’8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள படத்துக்கு ‘குருதி ஆட்டம்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.
புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம் ‘8 தோட்டாக்கள்’. இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகணேஷின் அடுத்த படம் குறித்துப் பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன. ஆனால், அவரோ எந்தவொரு செய்தியையும் உறுதிப்படுத்தாமல் இருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீகணேஷின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. ‘குருதி ஆட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகி மற்றும் படக்குழுவினர் இறுதிச் செய்யும் பணியில் தீவிரம் காட்டிவருகிறது படக்குழு.
ராக் போர்ட் நிறுவனம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்துக்கான பூஜை சென்னையில் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது.