அரவிந்த் சாமியின் ‘நரகாசூரன்’: ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸ்
அரவிந்த் சாமி நடித்துள்ள ‘நரகாசூரன்’ படம், ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஃபேன்டஸி த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ரான் இதான் யோகன் இசையமைத்துள்ளார். கார்த்திக் நரேனே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து தயாரித்த கெளதம் வாசுதேவ் மேனன், சில பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இந்தப் படம், ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரெய்லர், இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த ட்ரெய்லரை சில தினங்களுக்கு முன் பார்த்த அரவிந்த் சாமி, ‘கதைசொல்லியின் நோக்கத்தைக் காட்டுகிறது இது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.