தளபதி-62 படத்தின் புதிய டைட்டில் இதுதான்! ரசிகர்கள் மகிழ்ச்சி!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படிப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்தது. அங்கு விஜய் இளைஞர்களுடன் பைக்கில் ஊர்வலம் செல்வது போன்ற காட்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதையடுத்து, இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, முன்னதாக படத்தில் வரும் விஜய்யின் தோற்றம் போன்று ஒரு புகைப்படம் வெளியானது. அந்த புகைபடத்தை கண்ட ரசிகர்கள் விஜய் துப்பாக்கி படத்தை விட இதில் அழகாகவும், மாஸாகவும், இருக்கிறார் என்று கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே விஜய், முருகதாஸ் படத்திற்கு கத்தி, துப்பாக்கி என்று டைட்டில் வைத்தயடுத்து, தற்போது இந்த படத்திற்கு கோடாரி என்று பெயர் வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, விஜய்யின் பிறந்தநாள் அன்று பர்ஸ்ட் லுக்குடன் படத்தின் டைட்டில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.