EBM News Tamil
Leading News Portal in Tamil

இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் ராயல் குடும்ப இளவரசர்!

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். ராயல் குடும்பத்தில் இருந்து இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கென்சிங்டன் பேலஸ் இதுகுறித்து அறிவித்துள்ளதாகவது… பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் இரண்டாவது வரிசையில் இருக்கும் இளவரசர் வில்லியம்ஸ் அடுத்த மாதம் ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என தெரிவித்துள்ளது.
ஜூன் 24-ஆம் தேதி அம்மான் நகரில் அவரது பயணம் தொடங்குகிறது, மேலும் ஜூன் 28 அன்று எருசலேமில் முடிவடைகிறது. இளவரசர் வில்லியம்ஸின் இந்த பயணம் ராயல் குடும்பத்தை சேர்ந்த முதல் நபரின் பயணமாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 1994-ஆம் ஆண்டு இளவரசர் பிலிப் கிரேக்கத்தில் தனது அரண்மனையின் கதவுகளைத் திறப்பதன் மூலம் யூதர்களை காப்பாற்றுவதற்காக அவரது தாயான இளவரசி அலிஸ் பாட்டன்பேர்க், யட்சம் வாசுமத்தை கௌரவித்தார்.


2016-ஆம் ஆண்டில் இளவரசர் சார்லஸ் முன்னாள் இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
மேலும், ராணி எலிசபெத்தின் உறவினர்கள் கவுன் டியூக் மற்றும் க்ளூசஸ்டரின் டியூக் ஆகியோர் 1998 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வமற்ற வருகைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது இளவரசர் வில்லியம்ஸ் உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் செல்வது குறிப்பிடத்தக்கது!