ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பின் ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | director nelson next movie jailer 2 and joint hands with jr ntr
சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கூலி’ படத்துக்குப் பின் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இருக்கும் என தெரிகிறது.
‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பின், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் நெல்சன். இதற்கான கதை விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால், ஜூனியர் என்டிஆர் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தை தொடங்கி இருக்கிறார் நெல்சன்.
சில மாதங்களுக்கு முன்பு ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது தன்னிடம் உள்ள கதைகளை கூறியிருக்கிறார். அதில் ஒரு கதையை ஜூனியர் என்.டி.ஆர் ஒகே சொல்ல, அதற்கான பணிகளை இப்போது தொடங்கியிருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் இணையும் படத்தை ஹரிகா & ஹாசினி நிறுவனம் மற்றும் சித்தாரா நிறுவனம் இணைந்து தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.