EBM News Tamil
Leading News Portal in Tamil

தேவதை வம்சம் நீயோ… வசீகரிக்கும் சாய் தன்ஷிகா க்ளிக்ஸ்!  | Sai Dhanshika latest album


நடிகை சாய் தன்ஷிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க போராடும் நடிகைகளில் முக்கியமானவர் சாய் தன்ஷிகா.

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘மனதோடு மழைக்காலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சாய் தன்ஷிகா.

அடுத்து ‘மறந்தேன் மெய் மறந்தேன்’, ‘திருடி’ போன்ற படங்களில் நடித்தார்.

2009-ல் வெளியான ‘கெம்ப்’ கன்னட படத்தின் மூலம் கன்னட ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அதே ஆண்டில் வெளியான ‘பேராண்மை’ தமிழ் படத்தில் கவனம் பெற்றார்.

‘அரவான்’, ‘பரதேசி’ என நடித்து வந்தார்.

அவருக்கு ‘கபாலி’ படம் பரலவான கவனத்தை பெற்று தந்தது.

தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் அவர் நடிப்பில் ‘ஐந்தாம் வேதம்’ வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.