சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு! | Suriya s Kanguva release trailer released by film crew
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’ திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் பல்வேறு மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், 1.30 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கடந்த காலம் மற்றும் நிகழ் காலம் ஒவ்வொரு ஷாட்டும் செல்கிறது. ‘மைய்யாலும், ரத்தாதலும் எழுதப்பட்ட கடந்த கால, நிகழ் கால மோதல்’ என கேப்ஷன் கொடுத்து படக்குழு இந்த ரிலீஸ் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. துரோகம், மீட்சி, கவுரவம் என்ற வாசகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. >>வீடியோ லிங்க்