EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜி.வி.பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் பரிசு! | Sivakarthikeyan gifts watch to GV Prakashkumar


மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள படம், ‘அமரன்’. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் ரூ.200 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள ‘ஹே மின்னலே’ உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வாட்ச் ஒன்றை சிவகார்த்திகேயன் பரிசாக அளித்துள்ளார். அதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், ‘அமரன் படத்தின் வெற்றிக்கு இனிய பரிசு வழங்கியதற்காக நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.