EBM News Tamil
Leading News Portal in Tamil

பால்வண்ண நிலவெடுத்து… கீர்த்தி ஷெட்டி ‘க்யூட்’ கிளிக்ஸ்! | actress Krithi Shetty latest album viral in social media


தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வளரும் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயதான கீர்த்தி ஷெட்டி இந்தியில் வெளியான ‘சூப்பர் 30’ படம் மூலம் திரைத் துறைக்குள் நுழைந்தார்.

2021-ல் வெளியான ‘உப்பென்னா’ தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும், தெலுங்கில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘தி வாரியர்’ படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நாக சைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி.

டோவினோ தாமஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஏஆர்எம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அடுத்து தமிழில் கீர்த்தி ஷெட்டி நடிப்பில், ‘வா வாத்தியாரே’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘ஜெனி’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.