EBM News Tamil
Leading News Portal in Tamil

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ டீசர் எப்படி? – ஷங்கரின் ஃபார்முலா ஆட்டம்! | ram charan starrer shankar directorial game changer movie teaser


சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? – “பொதுவாக ராம் மாதிரி நல்லவன் எவனும் இல்ல; ஆனா கோபம் வந்தா அவன மாதிரி கெட்டவன் யாருமில்ல” என்ற பில்டப் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. பிரமாண்டமும், நடிகர்களின் அணிவகுப்பும், வித்தியாசமான பல கெட்டப்களும் டீசரில் பார்த்தும் கவனம் பெறும் அம்சங்கள். தெலுங்கு படம் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளை ‘அன்லிமிட்ட’டாக வைத்திருக்கிறார் ஷங்கர். வேட்டி கட்டிக்கொண்டும், காலேஜ் ஸ்டூடண்ட் போன்றும், ஃபார்மல் உடையுடனும் பல வித தோற்றங்களில் காட்சியளிக்கிறார் ராம் சரண். உண்மையில் அவர் யார் என்பது தெரியவில்லை.

இறுதியில் “நான் கணிக்க முடியாதவன்” என அவர் சொல்வதை போல டீசர் காட்சிகள் படத்தின் கதையை கணிக்கவிடாமல் தடுக்கின்றன. அதேசமயம், ஷங்கரின் அதே ஃபார்முலா இந்தப் படத்தின் தன்மையை யூகிக்கும் கைகொடுத்த உதவுகிறது. கலர்ஃபுல் பாடல்கள், பிரமாண்ட காட்சிகள், அதீத ஆக்‌ஷன், அரசியல் சார்ந்த சமூக கருத்துகள் என தனது முந்தைய படங்களை கலைத்துப் போட்டு ஷங்கர் ஆடியிருக்கும் ஆட்டம் தான் ‘கேம் சேஞ்சர்’ என தெரிகிறது.

கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர், ராம் சரண் ஹீரோவாக வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் வீடியோ: