EBM News Tamil
Leading News Portal in Tamil

சுட்டும் விழி சுடரே… பிரியங்கா மோகன் ப்யூட்டிஃபுல் க்ளிக்ஸ்! | actress Priyanka Mohan latest album


நடிகை பிரியங்கா மோகனின் சமீபத்திய புகைப்படங்களும், அவரது போஸ்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன்.

அடுத்த படமே சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார்.

மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படத்தில் நடித்தார் பிரியங்கா.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவராக நடித்தார்.

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நடித்தார்.

அண்மையில் வெளியான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் ‘கோல்டன் ஸ்பேர்ரோ’ பாடலில் சிறப்பு தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தார்.

பிரியங்கா மோகனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.