EBM News Tamil
Leading News Portal in Tamil

‘கண்ணப்பா’ படத்தில் பிரபாஸ் தோற்றம் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி | Prabhas look from Vishnu Manchu’s Kannappa leaked


ஹைதராபாத்: ‘கண்ணப்பா’ படத்தில் நடிகர் பிரபாஸின் தோற்றம் கசிந்திருப்பதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முகேஷ் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்பாபு, சரத்குமார், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசரில் அனைவருடைய தோற்றமும் ஓரளவுக்கு தெரிவது போலவே இருந்தது. தற்போது இதில் பிரபாஸ் நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி இருக்கிறது. அனைத்துமே ப்ளூ ஸ்கிரீன் பின்னணியில் உருவாக்கப்பட்டு கிராபிக்ஸ் காட்சிகளாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படங்கள் லீக்காகி இருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள பதிவில், கண்ணப்பா’ படம் 8 ஆண்டுகள் உழைப்பும் என, 2 ஆண்டுகளாக தயாரிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், யாரும் புகைப்படங்களை பகிர வேண்டாம் எனவும், எப்படி, எங்கு, யார் மூலமாக இவை லீக்கானது என்ற தகவல் கொடுத்தால் 5 லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.