‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகிறார் கயாடு லோஹர்.
கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் நடிப்பதற்கு நல்ல கதைகளைத் தேடி வந்தார். தற்போது ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனை படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.
அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் மற்றொரு நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘டிராகன்’ படத்தை முடித்தவுடன் சிம்பு நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். அதனையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.