EBM News Tamil
Leading News Portal in Tamil

பார்வையாலே பற்ற வைக்கும் ஸ்ரேயாவின் ‘தீபாவளி’ க்ளிக்ஸ்! | shriya saran latest diwali photo album


தீபாவளியை முன்னிட்டு நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள சிறப்பு புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, இந்தப் புகைப்படங்களால் ஸ்ரேயா ரசிகர்களுக்கு முன்கூட்டியே தீபாவளி தொடங்கிவிட்டது.

2001-ல் வெளியான ‘இஷ்டம்’ தெலுங்கு படம் மூலம் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்தார் ஸ்ரேயா.

2003-ல் வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

தொடர்ந்து, தெலுங்கு, இந்தி, தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

2005-ல் வெளியான ‘மழை’ படத்தில் அவரது நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ரஜியுடன் இணைந்து ‘சிவாஜி’ படத்தில் நடித்தார். விஜய்யுடன் இணைந்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் நடித்தார்.

‘குட்டி’, ‘கந்தசாமி’, ‘ரௌத்திரம்’ என பல்வேறு படங்களில் நடித்து கவனம் பெற்றார் ஸ்ரேயா.

ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கன்னடத்தில் வெளியான ‘கப்சா’படத்தில் அண்மையில் நடித்தார்.

இந்தியில் வெளியான ‘ஷோ டைம்’ வெப்சீரிஸிலும் நடித்திருந்தார்.

ஸ்ரேயாவின் தீபாவளி புகைப்படங்களால் கூடுதல் ஒளி பெற்றுள்ளது ரசிகர்களின் தீபாவளிப் பண்டிகை.