EBM News Tamil
Leading News Portal in Tamil

குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ டிச.20-ல் ரிலீஸ்!  | Gurusomasundaram starrer Bottle Radha movie gets a release date


சென்னை: குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அவரது தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’.இப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து இயக்குநர் தினகரன் கூறுகையில், “இந்தப் படம் நகைச்சுவையையும், நம்பிக்கையையும் அடிப்படையாக கொண்டது. படத்தில் குரு சோமசுந்தரம் கொத்தனாராகவும், குடிப் பழக்கத்துக்கு அடிமையானவராகவும் நடித்துள்ளார். மொத்தக் கதையும் மீண்டு வருவதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.