EBM News Tamil
Leading News Portal in Tamil

விஜயகாந்த்தை கொண்டாடியது ஏன்? – ‘லப்பர் பந்து’ இயக்குநர் விளக்கம் | Lubber Pandhu movie director explain why he celebrate vijayakanth in his movie


சென்னை: ‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த்தை கொண்டாடியதன் காரணம் குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விளக்கமளித்துள்ளார்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ என்ற விஜயகாந்த் பட பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தினை விஜயகாந்த் குடும்பத்தினரும் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார்கள். இதனிடையே, ‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்த் படத்தின் பாடல், புகைப்படங்கள் என வைத்து கொண்டாடியது ஏன் என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

அதில், “கடந்த 7-8 ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்போம். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதில் இருப்பவரை எப்படி கொண்டாட வேண்டும் என நினைத்தேனோ, அதை மட்டும் வேண்டுமென்றே வைத்தேன். ஒரு படம் பண்றேன், அதில் விஜயகாந்த் சார் இருப்பார், ‘பொட்டு வச்ச’ பாடல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அவை அனைத்தையும் வைத்து ஒரு வாரமாவது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டை உருவாக்க வேண்டும் என யோசித்தேன். அவை அனைத்துமே ட்ரெண்ட்டிற்கு தான். ஒரு ட்ரெண்ட் உருவாக்கப்பட்டது, அதை அனைவரும் பற்றிக் கொண்டார்கள். அதே ட்ரெண்ட்டை வைத்து மீண்டும் அவரை கொண்டாட வைக்க வேண்டும் என நினைத்து செய்தேன். அதுமட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த்தை கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்தக் காட்சிகள் அனைத்தையும் வைத்தேன். ஏனென்றால் நான் தீவிரமான விஜயகாந்த் ரசிகன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.