EBM News Tamil
Leading News Portal in Tamil

துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தின் பணிகள் தொடக்கம் | Rana Daggubati, Dulquer Salmaan team up for new film Kaantha


சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ படத்தின் பணிகள் இன்று (செப்.9) பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை நடிகர் ராணாவுடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆவணத் தொடர் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’. இந்தத் தொடரை இயக்கியவர் செல்வமணி செல்வராஜ். அவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு ‘காந்தா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன. படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் கூறுகையில், “ராணாவுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஓர் அழகான கதை” என்றார்.